புலியடிதம்பம் பகுதியில் மாடு முட்டி விவசாயி பலி
புலியடிதம்பம் பகுதியில் மாட்டுவண்டி பந்தயத்தை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 12:34 GMT
அரசு மருத்துவமனை
சிவகங்கை மாவட்டம், புலியடிதம்பம் பேருந்து நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை திட்டுகோட்டையை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது மாட்டு வண்டி ஒன்று ஆறுமுகத்தின் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்