மின் கம்பியை மிதித்த விவசாயி பலி

கள்ளகுறிச்சி மாவட்டம், பெரியகுறிக்கை பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-31 09:11 GMT

விவசாயி பலி

திருக்கோவிலுார் அடுத்த பெரியகுறிக்கையைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஜானகி ராமன், 30; இவர், நேற்று காலை 6:30 மணிக்கு தனது வயலுக்கு சென்றார். அப்போது, சோள வயலுக்கு மேல் சென்ற மின்கம்பி திடீரென அறுந்து ஜானகிராமன் மீது விழுந்தது.

பக்கத்து வயலில் இருந்த பழனிவேல் இதனைப் பார்த்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்து அவரை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜானகிராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News