நவீன காலத்திலும் பழமை மாறாத மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவசாயி

சங்ககிரி அருகே பழமை மாறாத விவசாயி :நவீன காலத்திலும் பனை ஓலையை மாட்டு வண்டியில் எடுத்துச்சென்று பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

Update: 2024-01-19 16:22 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி கல்லம்பாளைம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் அவரது இரட்டை மாட்டு வண்டியில் பனை ஓலைகளை விற்பனை கொண்டு சென்றது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.... நாட்டில் விஞ்ஞானம் வளர வளர பொதுமக்களும் நவீன இயந்திரங்களை கொண்ட புது பரிமாணத்திற்கு மாறி வருகின்றனர். தற்போது வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட இரு சக்கர வாகனத்தில் சென்று வருவது அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பல்வேறு பாரங்களை ஏற்றிச் செல்ல இன்றைய நவீன உலகத்தில் பெட்ரோல், டீசலில் இயங்க கூடிய நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம், அரசிராமணி கல்லம்பாளைம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் அவரது விவசாய தோட்டத்தில் உள்ள பனை மரங்களிலிருந்து ஓலைகளை வெட்டி விற்பனைக்காக எடப்பாடி அருகேயுள்ள வெள்ளரி வெள்ளி கிராமப்பகுதியில் ஓலை குடிசை அமைக்க மற்றொரு விவசாயி கேட்டுக்கொண்டதன் பெயரில் விவசாய ஆறுமுகம் மினி ஆட்டோவிலோ, டெம்போவிலோ எடுத்து செல்லாமல் விவசாயிக்கு சொந்தமான தனது இரட்டை மாட்டு வண்டியிலேயே எடுத்துச் சென்றது அரசிராமணி, மூலப்பாதை, எடப்பாடி பகுதிகளில் உள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News