ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில் ஈரோடு மார்கமாக செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.;
Update: 2024-03-02 01:12 GMT
தடம்புரண்ட சரக்கு ரயில்
ஈரோடு பகுதியில் இருந்து ஈரோடு மார்க்கமாக சரக்கு ரயில் காலியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது திருப்பத்தூர் கட்டேரி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீர் என சரக்கு ரயிலின் 17 வது பெட்டியின் சக்கரங்கள் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டது. இது ரயில்வே துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் ரயில்வே துறை ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
காரணமாக ஈரோடு மார்க்கமாக செல்லும் தன்பாத், ஹலபி, உள்ளிட்ட ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.