விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
எலியத்துார் ஊராட்சியில் விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
Update: 2024-02-23 04:30 GMT
எலியத்துார் ஊராட்சியில் விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, சின்னசேலம் ஒன்றிய துணைச் சேர்மன் அன்பு மணிமாறன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 20 விவசாய பயனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கல் வரப்பு, மண் வரப்பு, பண்ணைக் குட்டை வெட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. தி.மு.க., கிளைச் செயலாளர் ஞானசேகர், முனியப்பிள்ளை, நிர்வாகிகள் முருகேசன், தர்மலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.