நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கும்பல் 

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கும்பலால் பரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-03 16:30 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். வெளியூரிலிருந்தும் இரவு நேரங்களில் பஸ்கள் வந்து செல்வதால் இரவிலும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.   

     இந்த பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை மிரட்டி செல்போன்கள், நகைகளை பறிப்பது உள்ளிட்ட குற்ற செயல்கள் ஒரு கும்பல் அரங்கேற்றி வருவதாக புகார்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வெளியூர் சென்று விட்டு பெண் உள்பட சிலர் வடசேரி பஸ் நிலையம் வந்து இறங்கினார்.      

அவர்கள் குமரி மேற்கு மாவட்டம் பகுதிக்கு செல்லும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கும்பல் பஸ்ஸுக்காக காத்துக் நின்ற பெண்ணின் நகையை பறிக்க முயன்றது.        இதில் அந்தப் பெண் கூச்சல் இட்டார். சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்கள் அங்கே திரண்டனர். இதனை தொடர்ந்து நகை பறிக்க முயன்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

அவர்களை பிடிக்க போலீசாரும், பொதுமக்களும் விரட்டி சென்றனர்.        ஆனால் அந்த கும்பல் மின்னலாக மறைந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து பஸ் நிலைய  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News