திமுக செயல் வீரர்கள் கூட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-30 02:43 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் KN.நேரு வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர்,காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்.S.கதிரவன் ஆகியோர்களின் ஆலோசனைப்படி, வருகின்ற ஜூன் 3 ந்தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து மண்ணச்சநல்லூர் நகர கழகத்தின் சார்பில் திமுக செயல் வீரர் கூட்டம் நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், நகர செயலாளர் மனோகரன் பேரூராட்சித் தலைவர்.சிவசண்முக குமார் முன்னிலையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், இளைஞர் அணியினர்,தகவல் தொழில் நுட்ப அணியிணினர், வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News