மரக்காணத்தில் மாணவர்களை ஏற்றிச்சென்ற அரசு பேருந்து பிரேக் டவுன்
Update: 2023-11-23 07:21 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிகளில் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இவ்வாறு பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்தையே நம்பி உள்ளனர் அதிலும் குறிப்பாக ஆலத்தூர், குரும்புரம், கந்தாடு உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்து நிலையையே பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர் இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிகள் முடித்து மரக்காணத்திலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் வழக்கமாக சென்று கொண்டிருந்தபோது மரக்காணம் அடுத்த திரௌபதி அம்மன் கோவில் அருகே சென்ற அரசு பேருந்து திடீரென பிரேக் டவுன் ஆகி நின்றது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர், மேலும் பள்ளி விடும் சமயங்களில் ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது, அவ்வாறு கூட்டம் நிரம்பி காணப்படும் போது பேருந்துகள் பழுது ஏற்படுவதால் மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர், எனவே கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.