செஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் சாவு

Update: 2023-12-18 06:32 GMT
சாலை விபத்து 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்  மோகன் (வயது 46). கணினி பழுது நீக்கும் தொழில் செய்து வந்தார். இவர் சென்னை சென்று விட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சம்பவத்தன்று இரவு பஸ் மூலம் செஞ்சி அடுத்த கடலாடிகுளம் கூட்டுரோடு வந்திறங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து தேவதானம்பேட்டை நோக்கி சாலை யில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த அரசு பஸ், மோகன் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி அம்சவள்ளி கொடுத்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News