பெரியகுளம் கும்பக்கரை பிரிவில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து
பெரியகுளம் கும்பக்கரை பிரிவில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துககுள்ளானது.;
விபத்துக்கு உள்ளான பேருந்து
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் ஆவார். இவர் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவின் உடன் பிறந்த தம்பி ஆவார் .பாண்டியன் பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு செல்லக்கூடிய சாலையில் உள்ள அவரது தோட்டத்திலிருந்து திரும்பி இன்று காலை பெரியகுளம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்காக கும்பக்கரை பிரிவு அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து அதன் ஓட்டுனர் அதிவேகமாக ஒட்டிச் சென்று பாண்டியன் என்பவர் சென்ற கார் மீது மோதியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து கார் ஓட்டுனரும், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளருமான பாண்டியன் சாமர்த்தியமாக காரை இயக்கிய அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி நிறுத்தப்பட்டது .இந்த விபத்தில் பாண்டியன் என்பவருக்கு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியகுளம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.