மது அருந்த பணம் தராத மனைவி - கணவன் விபரீதம்

மது அருந்த மனைவி பணம் தராததால் பேருந்து ஓட்டுநர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-24 12:40 GMT

தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே மனம்பூண்டியை சேர்ந்தவர் சீதாராமன் (வயது 51). இவர் திருக்கோவிலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சீதாராமன் மது குடிக்க தனது மனைவி ராஜகுமாரியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதில் மனமுடைந்த சீதாராமன் விஷம் குடித்து அதே ஊரில் உள்ள புலவர் தெருவில் மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சீதாராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ராஜகுமாரி அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடிக்க பணம் கொடுக்காத தால், அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News