எடப்பாடியில்மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம்
எடப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமினை பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் தலைமையில் எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா துவங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்கள் உள்பட 110 பேர் பங்கு பெற்று தங்களது உடல் நிலையை பரிசோதித்து,மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான அடையாள அட்டை, பராமரிப்பு மானிய அட்டை,,இலவச பேருந்து மற்றும் தொடர்வண்டி பயண அட்டை.தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் 94 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றனர்.இதில் 6 குழந்தைகளுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனையை சரி செய்யும் விதமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் எடப்பாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுமதி, ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, எடப்பாடி வட்டார வளமைய சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆகியோர் இந்த முகாமை முன் நின்று சிறப்பாக நடத்தி முடித்தனர்.