புனித பயணம் சென்ற கேரள வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குருசுமலையில் நண்பர்களுடன் நள்ளிரவு புனித பயணம் மேற்கொண்ட கேரளா வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-03-18 07:34 GMT

புனித பயணம் சென்ற கேரள வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கேரள மாநிலம் காட்டாக்கடை தாலுகா செம்பூரு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் நிதின்.கேரளா மின் வாரியத்தில் பணி செய்து வந்தார். நிதின் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் ராஜலெட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.தற்போது நிதினின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். நிதினின் அக்கா நித்யா கன்னியாகுமரி மாவட்டம் கண்ணுமாமூடு ராமவர்மச்சேரி கடமம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் அக்காவின் வீட்டில் வந்த நிதின் குருசுமலை ஏற விருப்பம் தெருவித்தார். தற்போது குறுசுமலை திருப்பயணம் நடந்து வருகிறது. கர்ப்பிணி என்பதால் நிதினின் மனைவி மலை ஏற விரும்பவில்லை. ஆகவே நிதின் தனது நண்பர் அனில் குமாருடன் சேர்ந்து குருசுமலை ஏற திட்டமிட்டனர். இரவு இருவரும் மலை ஏறினர்.

Advertisement

நள்ளிரவு, 12வது சிலுவை பகுதியில் வந்தபோது நிதினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள் ளது. இது குறித்து நிதின் தனது நண்பரிடம் கூறி உள்ளார். சற்று நேரம் ஓய்வெடுத்து செல்லலாம் என நண்பர் கூறியதால் அப்பகுதியில் இருவரும் இருந்தனர்.இதற்கு இடையே நிதின் நெஞ்சை பிடித் துக்கொண்டு சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுகாணி போலீசார்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News