காதல் பிரச்சனையில் வாலிபருக்கு சாவி குத்து

பூதப்பாண்டி அருகே காதல் பிரச்சினையில் வாலிபரை சாவியால் குத்தி தாக்கிய இரு வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-30 06:01 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த தெள்ளாந்தி,  ஆர் சி சர்ச் தெருவை செய்தவர் ஜெர்ஷின் ( 19).  இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.      இந்த நிலையில் ஜெர்ஷினும் அவருடைய நண்பர் சேம்பிரிட்டோ என்பவரும் சம்பவ தினம் கோட்டார் ரயில்வே ரோட்டில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது வட்டவிளை என்ற இடத்தை  சேர்ந்த ஜினோ (20) உள்ளிட்ட இரண்டு பேர் அங்கு வந்து திடீரென ஜெர்சினுடன் தகராறு செய்தனர்.

 இதில் ஜினோ மோட்டார் சைக்கிள் சாவியால் ஜெர்ஷினை குத்தினார்.   இதில் பலத்த காயம் ஏற்பட்ட ஜெர்ஷின்  இது குறித்து கோட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜினோ உட்பட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சேம் பிரிட்டோவும் ஜினோவும் ஒரே பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தது தெரிய வந்தது. சேம் பிரிட்டோ காதலுக்கு ஜெர்ஷின் உதவி செய்ததாக கருதிய ஜினோ அவரை தாக்கியுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காதல் பிரச்சினையால்  இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Tags:    

Similar News