உப்பிடமங்கலம் மார்க்கெட் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பிடமங்கலம், வடக்கு கேட், ராஜவீதி பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் உப்பிடமங்கலம் மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சேகரன் என்பவர், வைத்தீஸ்வரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 500-ஐ பறித்து சென்றார்.
இது தொடர்பாக வைத்தீஸ்வரன் வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற சேகரனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து நவம்பர் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.