ஏனாதிமங்கலத்தில் பசுமாட்டிற்கு பிறந்தநாள் கொண்டாடிய தொழிலாளி
ஏனாதிமங்கலத்தில் பசுமாட்டிற்கு தொழிலாளி பிறந்த நாள் கொண்டாடிய நிகழ்வு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 27). இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் ஆசையாக வளர்த்து வந்த மாடுகளில் ஒன்று கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கன்று போட்டது. அதற்கு கருப்பாயி என பெயர் வைத்து சிவகுமார் வளர்த்து வந்தார்.
தற்போது கருப்பாயி நன்கு வளர்ந்து நேற்றுடன் 3 வருடங்கள் ஆனதை அடுத்து அதற்கு பிறந்தநாள் கொண்டாட சிவகுமார் முடிவு செய்தார். அதன்படி நேற்று மாலை கருப்பாயியை குளிப் பாட்டி அதற்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து அதே பகுதியில் உள்ள தனது குல தெய்வமான வீரன் கோவிலுக்கு குடும்பத்துடன் அழைத்து சென்றார். அங்கு சாமிக்கு பூஜை செய்து கருப்பாயிக்கு தீபாராதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து கருப்பாயியை வீட்டுக்கு அழைத்து வந்த சிவகுமார் தனது வீட்டின் முன்பு உறவினர்களு டன் சேர்ந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடி னார்.
மனிதர்கள் தங்கள் பிறந்தநாளை கொண்டாடி மகிழந்து வரும் நிலையில் தொழிலாளி ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த பசுமாட்டுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்ப வம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.