சேலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
சேலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாகலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37), தொழிலாளியான இவர் பெத்தநாயக்கன்பாளையம் சென்று விட்டு கடந்த 13-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் செல்லியம்பாளையம் தண்ணீர் பாறை அருகே வந்த போது நிலை தடுமாறியதில் மோட்டார் சைக்கிளுடன் ராஜேந்திரன் கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் மகன் தேவராஜிக்கு தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற தேவராஜ் தந்தைக்கு வெளி காயம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
14-ந் தேதி வயிற்று வலி அதிகமானதால் தேவராஜ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிசிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார் இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து கரிய கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.