மது அருந்தும் போது ஏற்பட்ட தகறாறில் கூலி தொழிலாளி குத்தி படுகொலை

விருதுநகர் மாவடம் சிவகாசி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகறாறில் கூலி தொழிலாளி குத்தி படுகொலை .

Update: 2024-02-20 06:40 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வராஜ்( வயது 32). இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். செல்வராஜ் சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த கருத்தப்பாண்டி(17) இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு பேரும் நேற்றுஇரவு சிவகாசி பேருந்து நிலையம் அருகே புள்ளைகுழியில் தனியார் பட்டாசு கடை அருகில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இரண்டு பேரும் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கருத்த பாண்டி செல்வராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்துள்ளார்.. கொலை செய்த கருத்தப்பாண்டி சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேசனில் சம்பவத்தை கூறி சரண் அடைந்துள்ளார். போலீசார் விரைந்து சென்று செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த கொலை வழக்கு குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Tags:    

Similar News