கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

ஐயப்ப சீசன் மற்றும் வார விடுமுறையால் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது

Update: 2023-12-11 00:27 GMT
குமரியில் இன்று சூரிய உதயம் காண குவிந்தோர்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப சீசன் களை கட்டி உள்ளத்தை தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் இன்று வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை காண குவிந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். விவேகானந்தர் சிலையை பார்வையிட காலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்து நின்று படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
Tags:    

Similar News