கொலை வழக்கில் போலீசில் சிக்கியவர் விஷம் குடித்ததால் பரபரப்பு
கொலை வழக்கில் தொடர்புடையவர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (53). கடந்த நவம்பர் மாதம் அதே பகுதி சுபாஷ் (43) என்ற டிரைவர், மோகன்தாசை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, சுபாஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சுபாஷ் சடயமங்கலம் என்ற பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்றனர்.
அங்கிருந்த சுபாஷை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது சுபாஷ் கையில் வைத்திருந்த விஷத்தை குடித்தார். இதனால் மயங்கி விழுந்தவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சுபாஷ் -க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.