குமாரபாளையம் அருகே மனைவியை பிரிந்தவர் சடலமாக மீட்பு

குமாரபாளையம் அருகே மனைவியை பிரிந்த நபர் வேறொரு பெண் வீட்டில் இறந்து கிடந்தார்.;

Update: 2024-01-18 15:08 GMT

காவல் வாகனம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மனைவியை பிரிந்த நபர் வேறொரு பெண் வீட்டில் இறந்து கிடந்தார். சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 60. முன்னாள் மின் வாரிய ஊழியர். இவரது மனைவி பிரபாவதி, 51. மேட்டூர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பல பெண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 08:00 மணியளவில், பிரபாவதியின் அக்கா தேவி போன் செய்து, குமாரபாளையம், எதிர்மேடு, பாரதி நகர் பகுதியில் உள்ள செல்வி என்பவர் வீட்டில், ரவிச்சந்திரன் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

Advertisement

இது பற்றி தகவலறிந்த பிரபாவதி, உறவினர்களுடன் நேரில் சென்று பார்த்த போது, செல்வி என்பவர் வீட்டில் தனது கணவர் ரவிச்சந்திரன்  இறந்து கிடந்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் பிரபாவதி புகார் செய்து, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும்,

இது குறித்து விசாரணை செய்திட வேண்டியும் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News