தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
திண்டுக்கல் அருகேயுள்ள மா.மூ.கோவிலூர் பகுதியில் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.;
Update: 2024-02-27 07:04 GMT
தண்டவாளத்தை கடக்க முயன்றவர் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகேயுள்ள மா.மூ.கோவிலூர் பகுதியில் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். தகவலறிந்ததும் திண்டுக்கல் ரயில்வே எஸ்ஐ அருணோதயம் தனிப்பிரிவு ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர் அந்த வழியாக சென்ற சென்னை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்த தெரியவந்தது.மேலும் இறந்தவர் சீலப்பாடி கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆக்டிங் டிரைவர் மாரிமுத்து (25) என்பதும், திருமணம் ஆகவில்லை என்பதும், இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்கும் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.