ஆடு மேய்க்க வந்த நபர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
மயிலாடுதுறை அருகே உக்கடை கிராமத்தில் ஆட்டு மந்தையில் பணியாற்றி வந்த நபரை கடந்த ஐந்தாம் தேதி முதல் மாயமானதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
Update: 2024-05-19 13:17 GMT
மயிலாடுதுறை அருகே உக்கடை கிராமத்தில் ஆட்டு மந்தையில் பணியாற்றி வந்த நபரை கடந்த ஐந்தாம் தேதி முதல் மாயமானதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் நடுப்பட்டி அருந்தவ புருவத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் புண்ணியகோடி (34). இவர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் முதுகுளத்தூர் வளநாடு தெற்கு தெரு பழனி மகன் விஜயமுருகனிடம் ஆடு மேய்க்கும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மயிலாடுதுறை அருகே நீடூர் உக்கடை பகுதியில் விஜய் முருகன் ஆட்டுமந்தையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி அன்று காலையில் புண்ணியகோடி ஆட்டுக்குட்டிகளை கூட்டில் அடைத்து வருவதாக கூறி சென்றவர் விஜய் முருகனிடம் கூறிச் சென்றவர் திரும்பவில்லை. விஜய் முருகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது உறவினர் தஞ்சை மாவட்டம் நடுப்பட்டியை சேர்ந்த அய்யாசாமி மகன் கலியபெருமாளிடம் தகவல் கூறினார் . அவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு மேய்த்து வந்த நபர் மாயமான மர்மம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.