நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது
ஒகேனக்கல் காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த வனத்துறையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காப்புக்காடு கரடிகுண்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஒகேனக்கல் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் நேற்று மாலை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கரடிகுண்டு வனப்பகுதியில் உள்ளபாறை இடுக்கில் இருந்த நாட்டுத் துப்பாக்கி யை கைப்பற்றினர். விசாரணையில், ஒகேனக்கல் அடுத்த நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்த வனத்துறை யினர் அவருடன், நாட்டுத் துப்பாக்கியையும் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். மேலும் மாரிமுத்துக்கு துப்பாக்கி வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்டம் சேசுராஜபுரம் பகுதியை சேர்ந்த அருட்செல்வம் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.