குமரியில் மீன்பிடிக்க சென்றவர் கடலில் மூழ்கி பலி

Update: 2023-12-16 04:29 GMT
அருள்தாஸ்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் ஜான் பால் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (60). இவர் முட்டம் பகுதி  கில்பர்ட் என்பவரின் விசைப்படையில் மீன் பிடித்து வருகிறார். சம்பவ தினம் விசைப்படகில் அருள்தாஸ் மற்றும் 20 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க புறப்பட்டனர். கூடங்குளம் கடல் பகுதியில் 35 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகின் அடிப்பகுதியில் கயிறு சிக்கிக்கொண்டது.  இந்தக் கயிறை எடுப்பதற்காக அருள்தாஸ் வேற கயிறு மூலம் கடலில் இறங்கினார். அப்போது அவர் திடீரென மயங்கி கடலில் மூழ்கியுள்ளார். உடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு படகில் ஏற்றினர். ஆனால் அதற்குள் அருள்தாஸ் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அருள்தாசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்புள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News