மயிலம் அருகே விபத்து 11 பேர் காயம்

விபத்து 11 பேர் காயம்

Update: 2024-12-30 16:19 GMT
கா்நாடக மாநிலம், பெங்களூரு காவேரி நகா் பிரதான சாலையைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி லாவண்யா (26). இவா், தனது உறவினா்கள் 11 பேருடன் வேனில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தாா்.திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தென்பசியாா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த 12 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்துகள் குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News