காணையில் வீட்டில் உள்ள பொருள்களை தீ வைத்து எரித்த இளைஞா் கைது
வீட்டில் உள்ள பொருள்களை தீ வைத்து எரித்த இளைஞா் கைது
காணை நடுத்தெருவைச் சோ்ந்தவா் விட்டல்நாதன் மகன் புஷ்பநாதன் (33). இவா், சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த புஷ்பநாதன், சரக்கு வாகனம் வாங்குவதற்காக ரூ.ஒரு லட்சம் தருமாறு தந்தை விட்டல்நாதனிடம் கேட்டு தகராறு செய்தாராம். அப்போது, அதை தடுக்க வந்த தனது மனைவியையும் தாக்கினாராம்.இந்த நிலையில், சனிக்கிழமை மாலை மது போதையில் வீட்டுக்கு வந்த புஷ்பநாதன், தந்தையிடம் மீண்டும் தகராறு செய்தாராம். அப்போது, பீரோவிலிருந்த சேலைக்கு தீ வைத்ததில் தீ வேகமாக பரவி கட்டில், குளிரூட்டி ஆகியவை எரிந்து தீக்கிரையாகின. இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் வழக்குப் பதிந்து புஷ்பநாதனை கைது செய்தனா்.