செஞ்சி அருகே வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமானுஜம் (77). இவா், செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அருணை நகா் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த வேன் ராமானுஜம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.