தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ஆலோசனை
விடுதி உரிமையாளர்களுடன் டி.எஸ்.பி., ஆலோசனை;
கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோவில், இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ரிசார்ட், கெஸ்ட் அவுஸ், ஓட்டல்கள் உள்ளன. நாளை மறுநாள் 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இப்பகுதியில் குவிந்து வருகின்றன.மது விருந்தோடு கொண்டாட ஆயத்தமாகும் சுற்றுலாப்பயணிகளால், சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில், தனியார் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் மண்டலத்ததில் நடந்தது.இதில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது, தங்கும் விடுதிகளில் மது விற்பனை செய்யக்கூடாது.விருந்தினர்களின் விபரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அறைகள் வழங்கக்கூடாது.விடுதிகளில் தங்கியுள்ள விருந்தினர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடித்து இரவு 1;00 மணிக்குள் அறைகளுக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.