நகைக்கடை கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டை -மாநகர காவல் ஆணையர்

நகைக்கடை கொள்ளை கொள்ளையன் இன்னும் கைது செய்யப்படவில்லை ஏன மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.

Update: 2023-12-01 00:26 GMT

காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை:காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி இரவு 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கபட்டு சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் பேசுகையில், நகைக்கடை கொள்ளையனை பிடிக்க துணை ஆணையாளர்கள் சண்முகம் மற்றும் சதீஷ் ஆகியோர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தர்மபுரி மாவட்டம் ஆரூரைச் சேர்ந்த விஜய் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறினார். இந்த கொள்ளை சம்பவத்துக்கு அவரது மனைவி நர்மதா உடந்தையாக செயல்பட்டு உள்ளதாகவும் நகைகளை திருட திட்டமிட்டதிலிருந்து பதுக்கி வைப்பது மற்றும் விஜய்யை தப்பிக்க வைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அவரது மனைவிக்கு பெரும்பங்கு இருப்பதாக தெரிவித்தார்.

நான்கு கிலோ 200 கிராம் தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் பதிவான நிலையில் விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்து அவரிடம் இருந்து மூன்று கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆணைய தெரிவித்தார்.அரூர் அடுத்த கம்பைநல்லூர் மற்றும் கோவை ஆர்.எஸ் புரம் காவல் காவல் நிலையங்களில் விஜய் மீது ஏற்கனவே 3 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் இந்த வழக்கில் மேலும் யாரும் சம்பத்தபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.இ

து போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க கோவை மாநகர பகுதிகளில் உள்ள நகைக் கடைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வைத்துள்ள கடைகளில் உயர் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களை பொருத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியை அதிகரித்து சிசிடிவி செயலி வாயிலாக கண்காணித்து வருவதாகவும் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது விஜய்க்கு உதவி செய்துள்ளார்களா என்பது அவரது கைதுக்கு பின்பே தெரியவரும் என தெரிவித்தார்‌.

Tags:    

Similar News