நத்தம் ஒன்றியக்குழுவின் கூட்டம்
Update: 2024-01-05 10:20 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியக்குழுவின் கூட்டம் அலுவலக வளாக அரங்கில் வியாழக்கிழமை நடந்தது. இதற்கு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்தையா, ஒன்றிய ஆணையாளர் விஜயசந்திரிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்திருந்த அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுமதி வரவேற்றார். இதில் வரவு-செலவு உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி சிவஞானம், அம்மா பொண்ணு, தமிழ்ச் செல்வி, செல்வராஜ், ரத்தினக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.