ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து திருவிழா !
நத்தம் அருகே முன்னதாக அங்குள்ள வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து கறிவிருந்து படையல் வைக்கப்பட்டு சுவாமி வழிபாடு நடந்தது.
By : King 24x7 Angel
Update: 2024-03-19 10:51 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கறி விருந்து சமைத்து ஒவ்வொரு வீடுகளுக்கும் கறி விருந்தை அன்னதானமாக வழங்குவதை பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர். இதை வீட்டில் உள்ள அனைவரும் பிரசாதமாக ஏற்று உண்டு மகிழ்வர். இதையொட்டி இந்த ஆண்டு நடைபெற்ற இந்த விருந்தில் நேர்த்திக் கடனாக ஊர் பொதுமக்களால் வழங்கப்பட்ட சுமார் 50 கிடாய்கள் மற்றும் 100 சிப்பம் அரிசிகள் கொண்டு சமைக்கப்பட்ட கறி விருந்து இங்கு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சமைத்தனர். முன்னதாக அங்குள்ள வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து கறிவிருந்து படையல் வைக்கப்பட்டு சுவாமி வழிபாடு நடந்தது.