பரமத்தி வேலூரில் வெளி மாநில மது பாட்டில் விற்ற பெண் கைது.

பரமத்தி வேலூரில் வெளி மாநிலம் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-20 15:08 GMT

பெண் கைது

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டிருந்ததின் பேரில்  வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா பரிந்துரையின் பேரில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பரமத்திவேலுார் பழைய பைபாஸ் சாலையில் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய‌ வகையில் நின்று கொண்டிருந்த பெண்னை பிடித்து விசாரணை நடத்தினார்.‌விசாரனையில் அந்த பெண் கரூர் மாவட்டம், மண்மங்கலத்தை சேர்ந்த கீதா(42) என்பதும் பாண்டிச்சேரியில் இருந்து மது‌ பானங்களை‌ வாங்கி‌‌ வந்து பரமத்திவேலுார் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதனையடுத்து அனுமதி இல்லாமல் மதுபானங்களை விற்பனை செய்த கீதாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரொக்கம் ரூ.800, 19 மது பாட்டில்கள்  மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News