நகராட்சி ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவேற்காடு நகராட்சியில் சம்பளம் பிடித்த செய்ததால் மனமுடைந்த நகராட்சி ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-14 03:09 GMT

நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா

திருவேற்காடு நகராட்சியில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் அரி இவர் இன்று மாலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தவர் நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவிடம் தனது சம்பளத்தில் ஏன் பிடித்தம் செய்தீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அரி அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றவர் இரண்டு லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி கொண்டு நகராட்சி அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு வேகமாக சென்றார்.  இதனை கண்டதும் சக ஊழியர்கள் வேகமாக பின்னாடியே சென்ற நிலையில் அரி தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

இதனை கண்டதும் நகராட்சியில் பனிபுரியும் சக ஊழியர்கள் ஓடி சென்று அரியை அங்கிருந்து மீட்டனர், இருப்பினும் அவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியை கைவிடாமல் இருந்தார். இருப்பினும் சக ஊழியர்கள் அரியை போராடி மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

இது குறித்து அவர் கூறுகையில் : நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் தான் இயக்கும் நகராட்சி வாகனம் பழுதடைந்ததால் அதற்காக தனது சம்பளத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டதாகவும் இது குறித்து கேட்டபோது வாகனத்தை தான் முறையாக பராமரிக்காததால் தனது சம்பளத்திலிருந்து பிடித்து செய்ததாகவும் மேலும் தான் விடுமுறை கேட்ட நிலையில் கமிஷனர் விடுமுறை கொடுக்காததால் தனது அவசர தேவைக்கு விடுமுறை எடுத்து கொண்டதாகவும் விடுமுறை முடிந்து வந்த நிலையில் தனது மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக மன உளைச்சல் ஏற்படுத்தும்படி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா நடந்து கொள்வதாகவும் இதனால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

மேலும் நகராட்சியில் பணிபுரியும் சக ஊழியர்களை நகராட்சி கமிஷனர் மன உளைச்சல் ஏற்படுத்துவது போல் செயல்படுவதாகவும் இவரால் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கிருந்து பணியிட மாற்றம் பெற்று செல்ல தீவிரம் காட்டி வருவதாகவும் நகராட்சி கமிஷனரின் அடாவடியை போக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  நகராட்சி கமிஷனர் ஏற்படுத்திய மன அழுத்தத்தால் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News