திருச்செங்கோட்டில் முதல்வர் பிறந்த நாளை முன்னிடடு விருந்து நிகழ்ச்சி

தமிழக முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சியை ஒட்டி திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

Update: 2024-03-01 09:06 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு திருச்செங்கோடு நகரமண் தலைவர் நளினி சுரேஷ் பாபு அசைவ விருந்தளித்தார்.

திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு நகர பொதுமக்கள் உள்ளிட்ட நானூருக்கும் மேற்பட்டோர்,இந்த அசைவ விருந்து பங்கேற்றனர்.

விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது முன்னதாக நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் இடையே பேசும்போது திராவிட மாடல அரசு நடத்தி வரும் முதல்வர் அவர்கள் பெண்களுக்கு முதியவர்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் அவருடைய பிறந்தநாளில் அவரது பணி சிறக்க வாழ்த்துவோம் என்று கூறினார்.

Tags:    

Similar News