ஈச்சர் வாகன மோதி முதியவர் பலி
ஈச்சர் வாகனம் மோதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பலியானார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகேஷ் (24). இவர் eicher வாகனத்தின் ஓட்டுநராக பயணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.இவர் ஈச்சர் வாகனத்தை மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட பாஜக கட்சி அலுவலக சர்வீஸ் சாலையில் ஈச்சர் வாகனத்தை பின்புறமாக ஓட்டி வந்த பொழுது பின்னால் இருந்த 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் மீது ஈச்சர் வாகனம் மோதி உள்ளது
இதை தொடர்ந்து அந்த முதியவர் கீழே விழுந்துள்ளார். இதை தெரியாத வாகன ஓட்டுனர் முருகேஷ் வாகனத்தை இயக்கியதில் அந்த வாகனத்தின் பின்புற டயர் அடையாளம் தெரியாத அந்த 60 வயது முதியவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த சம்பவம் குறித்த கிராம நிர்வாக அலுவலர் அருணகிரிக்கு தகவல் அளிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்