நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து
குமாரபாளையத்தில் நடந்து சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் கூலிதொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-11 02:52 GMT
நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் வசிப்பவர் கேசவராஜ், (48), விசைத்தறி கூலித் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் காந்திபுரம், சீரங்கசெட்டியார் வீதியில் நடந்து சென்றபோது, இவருக்கு பின்னால் வந்த டாடா ஆல்டா கார் மோதியதில், தலை, வாய், உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் கார் ஓட்டுனர் திருச்செங்கோடு, கொல்லப்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன தொழில் செய்து வரும் அரவிந்தன், (29), என்பவர் கைது செய்யப்பட்டார்.