ஏரியில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு
திருத்தணியில் ஏரியில் தவறி விழுந்தவரை உயிருடன் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.;
Update: 2024-03-05 16:23 GMT
ஏரியில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் குமார்,42. இவர் நேற்று மதியம் எஸ்.அக்ரஹாரம் ஏரியில் மீன்பிடிப்பதற்கு சென்றார். அங்கு ஏரிக்கரையில் இறங்கி துாண்டில் போட்டு மீன்பிடிக்கும் போது, ஏரியில் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர் கூச்சல் போட்டதால் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, ஏரியில் இறங்கி குமாரை உயிருடன் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.