ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருட்கள் சேதம் ஒருவர் கைது
மூங்கில்துறை குடிபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொருட்களை சேதமாக்கியவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-31 07:53 GMT
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருட்கள் சேதம் ஒருவர் கைது
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 41; இவர், நேற்று குடிபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றவர், சுகாதார நிலையம் கட்ட ஒன்றரை சென்ட் நிலத்தை என் தாத்தா தானமாக வழங்கினார் என கூறிய படி அங்குள்ள கம்ப்யூட்டர் மருத்துவ உபகணரங்களை அடித்து உடைத்தார். தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, கார்த்திகேயனை கைது செய்தனர்.