உரிமம் புதுப்பிக்காமல் பட்டாசு விற்பனை செய்தவர் கைது
பாலக்கோடு அருகே உரிமம் புதுப்பிக்காமல் பட்டாசு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-22 01:27 GMT
உரிமம் புதுப்பிக்காமல் பட்டாசு விற்பனை செய்தவர் கைது
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்தநாகதாசம்பட்டியை சேர்ந்தவர் ராஜா இவர் பாலக்கோடு அடுத்த கர்த்தரப்பட்டி மேம்பாலம் அருகே பட்டாசு மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று பட்டாசு கடைக்குசென்று ஆய்வு செய்தனர்.
அதில் உரிமம் புதுப்பிக்காமல் பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.