சங்கரன்கோவிலில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது
சங்கரன்கோவிலில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-27 13:57 GMT
கோப்பு படம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கழுகுமலை சாலையில் மது பாட்டில்களை விற்பனை செய்த சங்கரபாண்டி மகன் ஆதி அருணாசலம் என்பவர் அந்தப் பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்ததாக சங்கரன்கோவில் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற போலீசார் மது பாட்டில் விற்ற நபரை வளைத்து பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.