சேலத்தில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றவர் கைது

சேலத்தில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-04 16:33 GMT

கோப்பு படம் 

சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் சேலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறேன்.

நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாராயணன் என்பவருடைய மகன் நெடுமாறனிடம் இருந்து 48 சென்ட் நிலத்தை வாங்கினேன். இந்த நிலத்தை சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (46) என்பவர் ஓய்வு பெற்ற தாசில்தார் பெருமாள் உதவியுடன் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றார்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி விசாரனை நடத்தி மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற தாசில்தார் பெருமாள் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் ரவீந்திரனை போலீசார் கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News