ஆரணி அருகே சாராயம் கடத்த முயன்றவர் கைது
ஆரணி அருகே லாரி டியூப்களில் சாராயம் கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 16:20 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அத்தியூர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரி டியூப்களில் சாராயத்தை கடத்திச் செல்ல முயன்ற சஞ்சய்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய்குமார் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.