பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர் தவறி விழுந்து படுகாயம்
கீரனூர் அருகே அரசு பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்தவர் தவறி விழுந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;
Update: 2024-01-23 06:47 GMT
அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர் தாலுகா அலுவலகம் எதிரே நஞ்சூர் கோட்டாரபட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் கீரனூரில் இருந்து செங்கிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார். அப்போது கீரனூர் தாலுக்கா அலுவலகம் அருகே செல்லும் பஸ் ஆனது செல்லும் பொழுது திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஜெயசீலன் நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார் இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் அடிப்படையில் கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.