அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன

Update: 2023-12-22 06:09 GMT

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News