ராசிபுரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் காமக்கொடூரனுக்கு போக்சோ வழக்கு பதிவு

ராசிபுரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் காமக்கொடூரனுக்கு போக்சோ வழக்கு பதிவு

Reporter :  King News 24x7
Update: 2024-03-31 15:03 GMT

போக்சோ வழக்கு பதிவு

தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிக்கு வீடு புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் முருகேசன் என்ற கலைச்செல்வன் (30) மீது போக்சோ வழக்கு பதிவு... சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். ராசிபுரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி காமக்கொடூரனை அடித்து கட்டி வைத்த பொதுமக்கள். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான்புதூர் பகுதியைச் சேர்ந்தவன் முருகேஷன் (எ) கலைச்செல்வன், 30. இவன் தலைக்கேறிய கஞ்சா போதையில், வெண்ணந்தூர் ஒன்றியம் வலசு பகுதியில் உள்ள அருந்ததியர் தெருவில் வசிக்கும் 9 வயது சிறுமியின் வீட்டில் துழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்தாகவும், இதே போல் இருவரிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் சத்தம் கேட்டு எழுந்த சிறுமியின் தாத்தா கூச்சலிட்டுள்ளார் . விடியற்காலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்த நிலையில் தாத்தா கூச்சலிடமே சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காமக்கொடூரன் கலைச்செல்வனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார் கலைச்செல்வனை விசாரணைக்காக கூட்டிச் சென்றனர். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் இதுபோல் மூன்று வீட்டிற்குள் நுழைய முற்பட்டதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை படு ஜோராக நடைபெறுவது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர் .
Tags:    

Similar News