சேலம் அருகே பாமக முகவருக்கு அடி உதை

சேலம் அருகே வாக்கு சாவடிக்கு உள்ளே வாக்கு சேகரித்ததை தட்டி கேட்ட பாமக முகவருக்கு அடி உதை விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-19 10:52 GMT

போலீசார் விசாரணை 

சில நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்நிலையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள தொங்கும் பூங்கா மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் ஒரு சிலர் வாக்கு சாவடிக்கு உள்ளே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சி முகவர் கோகுல் என்பவர் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்களிடம் இங்கே வாக்கு சேகரிக்க கூடாது என தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கும் பாமக கோகுலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது கோகுலை சிலர் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வாக்கு சாவடியில் இருந்த நபர்களை அதிரடியாக வெளியேற்றினார்.

இது குறித்து தகவல் அறிந்து பாமக கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர் அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியேற சொன்னதால் போலீசாயிருக்கும் பாமக கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

Similar News