மூதாட்டியை தாக்கியதாக சிறுமி மீது காவல் நிலையத்தில் புகார்

அருமனை அருகே தனது மகளின் தூண்டுதலினால் தன்னை கம்பால் தாக்கியதாக சிறுமி மீது மூதாட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-29 07:29 GMT

காவல் நிலையம் 

அருமனை அருகே மாங்கோடு கண்ணம் பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி சைலஜா.இவரது மகள் அனிதா. அனிதாவின் கணவர் ராஜதுரை அனிதா தனது குடும்பத்துடன் தாயார் சைலஜா வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் அனிதாவை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என சைலஜா அடிக்கடி கண்டிஷன் போடுவாராம். இதனால் அனி தாவுக்கும், சைலஜாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் இதுகுறித்து அனிதா கூறியுள்ளார்.சம்பவத்தன்று சைலஜா தனது வீட்டின் அருகே நின்றுகொண் டிருந்தபோது 14வயது சிறுமி கம்பால் சைலஜாவின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சைலஜா மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இதுகுறித்து அருமனை காவல் நிலையத்தில் சைலஜா புகார் அளித்தார். அதில் தனது மகள் அனிதா தூண்டுதலின் பேரில் 14 வயது சிறுமி தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News