பாலியல் குற்றச்சாட்டில் சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸுக்கு பணியா???
மாவட்டக் காவல் அலுவலக அறையில் நள்ளிரவில் பிடிபட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் செம்பனார்கோயில் பணியமர்த்தப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிகமாக மயிலாடுதுறை காவேரி நகரை அடுத்து ஆரோக்கியநாதபுரம் பகுதியில் செயல்பட்டுவருகிறது. அதில் எஸ்.பி. தலைமையின்கீழ் ஏடிஎஸ்பி., டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அமைச்சுப் பணியாளர்கள் என 100க்கும்மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தின் அனைத்துக் காவல்நிலையங்கள், காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் தலைமை அலுவலகமாகத்திகழ்கிறது. பொதுமக்கள் குறைகேட்டு தீர்த்துவைக்கும் இடமாகவும் திகழ்கிறது. இதில் இருபால் காவலர்களும் பணியாற்றிவருகின்றனர். இளம் வயது முதல் ஓய்வுபெறப்போகும் வயதுவரை உள்ளவர்களும் பணியாற்றிவருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவு நேரத்தில் டிஎஸ்பி ஒருவருக்கு தகவல் கிடைத்ததன்பேரில் அவசர அவசரமாக மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திற்கு சென்றார். அங்கு உள்ள ஓர் ஏசி அறையை நீண்ட நேரம் தட்டும்போது உள்ளிருந்து ஆண் பெண் காவலர்கள் இருவர் வெளியே வந்தனர். இதைக் கண்டு அதிர்ந்துபோன டிஎஸ்பி., விசாரித்ததில் ஆண் காவலர் அதே கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தவர், பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியில் இருந்தவர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் மீனா உடனடியாக விசாரணை செய்து அவர்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்திருந்தார். காவல்துறையில் பொதுமக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் கோயிலாகக் கருதப்படும் கண்காணிப்பாளர் அலுவலத்தில் இரண்டு காவலர்கள் நடந்துகொண்ட இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் உடனடியாக அவர்களுக்கு தண்டனை அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைப் பாராட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆண் காவலர் தற்பொழுது மயிலாடுதுறை காவல் உட்கோட்டம் செம்பனகோயில் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் தெரிவிக்கையில், “பாலியல் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு காவலர் மீண்டும் அதே மாவட்டத்தில் அதே காவல் உட்கோட்டத்தில் பணியில் அமர்த்தியது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது குறைந்தபட்சம் வேறு மாவட்டத்திற்கு மாற்றியிருக்கவேண்டும், என்பதே என்போன்ற சமூக ஆர்வலர்களின்