மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பலி
திருவள்ளூர் மாவட்டம், நெடும்பரம் பகுதியில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் நெடும்பரம் ஊராட்சியில் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் மின் கம்பத்தில் ஏறி மின்சார பழுது பார்ப்பு பணியை ஒயர்மேன் பழனி என்பவர் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பத்திலிருந்து ஒயர்மேன் பழனி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் ஒயர்மேன் பழனி இறந்து போனார். சம்பவம் குறித்து பழனியின் பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்து போன மின்சார ஊழியர் பழனி ஒயர் மேன் ஆக பல ஆண்டுகாலம் பணிபுரிந்ததும், இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பணியில் இருக்கும் பொழுது ஒயர் மேன் பழனி உயிரிழந்ததால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசு பணி வழங்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.